இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி!
Friday, August 31st, 2018அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82% இனால் வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது.
கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 1.32 ரூபாவினால் (0.82%) சரிந்து வந்தது. இது நேற்று(30) உச்சத்தை தொட்டது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, இலங்கை ரூபாவின் மதிப்பு 7.73 ரூபாவினால் (4.99%) வீழ்ச்சியடைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாளை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகின்றது ஆனையிறவு புகையிரத நிலையம்!
மீண்டும் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!
800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
|
|