நீர்வேலி இரட்டைக் கொலை: நாளை தீர்ப்பு !

Wednesday, September 28th, 2016

நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கில் விசாரணைகள் நடைபெற்று தொகுப்புரைகளும் முடிவுற்றதையடுத்து, 29ஆம் திகதி வியாழக்கிழமை அதாவது நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக இன்று புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது,ஏற்கனவே முடிவுற்றுள்ள சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் அரசசட்டத்தரணி மற்றும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி ஆகியோர் தமது தொகுப்புரைகளைநிகழ்த்தினர்.

இந்தத் தொகுப்புரைகளைச் செவிமடுத்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்இந்த வழக்கிற்கான தீர்ப்பு நாளை வியாழக்கிழமை வழங்கப்படும் எனதெரிவித்தார்.சகோதரியையும் மைத்துனைனயும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சுமத்தி குணா என்றழைக்கப்படும் அருணாசலம்குகனேஸ்வரன் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில்இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீர்வேலி மேற்கில் கடந்த 2011ம் ஆண்டு மார்க்கண்டு உதயகுமார் என்பவரையும்,அவருடைய மனைவியாகிய உதயகுமார் வசந்திமாலா என்பவரையும் கொலை செய்தததுடன்,அவர்களின் மகனான உதயகுமார் குகதீபனைக் காயப்படுத்தி, அவர் மீது கொலை முயற்சிமேற்கொள்ளப்பட்டதாக, எதிரி குணா என்றழைக்கப்படும் அருணாசலம் குகனேஸ்வரன்என்பவருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 court-gavel-200-seithy

Related posts: