விலங்குகளின் தீவனத்திற்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யுங்கள் – உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை!
Friday, April 23rd, 2021கோழி இறைச்சிக்கு ஒரு கட்டுப்பாட்டு விலையை விதித்த அதே வழியில் விலங்குகளின் தீவனத்திற்கான கட்டுப்பாட்டு விலையையும் நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக விலங்குகளுக்கு பெற்றுக் கொடுக்கும் உணவுகளின் விலைகள் உயர்ந்து வருவதால் சிறு மற்றும் நடுத்தர கோழி வர்த்தகர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக அதன் தலைவர் மைத்ரி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏப்ரல் மாதத்திற்குள், விலங்குகளின் தீவனம் மட்டும் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
விலங்குகளின் தீவனத்திற்கு ஒரு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாவிட்டால், பெரிய அளவிலான நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும், மேலும் அனைத்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் அழிவடையக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|