இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கை – இந்திய ரிசர்வ் வங்கி தலைவருடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆராய்வு!

Friday, March 31st, 2023

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் முக்கிய தூணாக, இந்திய ரூபாவை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை விரிவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோர் இதில்,பங்கேற்றனர்.

இச்சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதுடன் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பிலான பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

மின்சாரம், எரிசக்தி, துறைமுகங்கள், உட்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை ஒருங்கிணைத்து, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்தியா வகிக்கக்கூடிய முக்கிய பங்கு பற்றியும் இவர்கள் கலந்தரையடினர்.

இதன்போது உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய மத்திய வங்கியின் நேரடித் தலையீட்டுடன் இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல், நாணய மாற்று ஏற்பாடுகள் மற்றும் கடன் ஒத்திவைப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் தாஸுக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: