செப் 28இல் தகவல் அறியும் உரிமை சர்வதேச மாநாடு! 

Monday, September 26th, 2016

நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்யும் சர்வதேச தகவல் அறியும் தின மாநாடு ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இம் மாநாடு “தகவல் அறிந்துகொள்வதும் ஊடக மறுசீரமைப்பும்” என்ற தொணிப்பொருளில் எதிர்வரும் 28ம் 29ம் திகதிகளில் கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும். இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. சார்க் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து சுமார்  20 பிரதிநிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இம் மாநாடானது ஒன்று தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்துவதில் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் அனுபவத்தையும் தொழில்நுட்பத்தையும் பரிமாறிக்கொள்வது.

எமது நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தும் செயற்பாடுகளை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும் கூடிய பயனுள்ளதாகவும் மேற்கொள்ள வழி பிறக்கின்றது. மேலும் தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தும் போது எதிர்நோக்கவேண்டிய சவால்களை முறியடிக்கவும் வெற்றிகொள்ளவும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் முதலான தெற்காசிய நாடுகளின் அனுபவங்கள் எமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

rti_conference

Related posts: