வளமான கிராமம் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு 2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, September 10th, 2020

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ‘சபிரி கமக்’ (வளமான கிராமம்) வேலைத்திட்டத்திற்காக ரூபாய் 28 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் 14021 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் ரூபாய் 2 மில்லியன் வீதம் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமரின் ஆலோசனைக்கேற்ப கிராமிய சனசமூக குழுக்களின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

இதனடிப்படையில் கிராம வீதிகள், படிகள், வடிகால்கள், சிறிய பாலங்கள், பக்க வடிகால் என்பவற்றை மேம்படுத்துதல், விவசாய பொருட்கள் உற்பத்திக்கு தேவையான களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல், கிராம மட்டத்தில் பொருளாதார மையங்கள், வாராந்திர சந்தைகள் மற்றும் சந்தை இடங்களின் மேம்பாடு, சிறிய குளங்கள், கால்வாய்கள், அணைக்கட்டுகள், குளங்கள், விவசாய கிணறுகள் புனரமைப்பு, சமூக குடிநீர் விநியோக திட்டங்கள், கிராமப்புற மருத்துவ மையங்களை நவீனமயப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பாடசாலைகளுக்கான மின்சாரம், நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், வனவிலங்குகளினால் மக்களின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் அபாயங்களை இல்லாது செய்வதற்கு அல்லது குறைப்பதற்கான திட்டங்கள் உள்ளடப்பக்கட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுகாதாரத்துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் கட்டுப்பாடுகளைத் தளர...
அனுமதிப்பத்திரம் இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது!
நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவ...