விநியோக குழாயில் வெடிப்பு : எரிபொருள் இறக்கும் நடவடிக்கை நிறுத்தம்!

Sunday, July 24th, 2016

எரிபொருள் விநியோக குழாயில் எற்பட்ட வெடிப்பு காரணமாக ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட 90 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் இறக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா மசகு எண்ணெய் தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்..

கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் விநியோக குழாயில் நேற்று மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்தே எரிபொருள் இறக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.  இதேவேளை, தரக்குறைவான எண்ணெய் குழாய் கொண்டு வரப்பட்டமையால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் எரிபொருள் இறக்கும் நடவடிக்கைகள் தாமதமானால் கப்பலுக்காக நாள் ஒன்றுக்கு பாரியளவில் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வெடிப்பு இடம்பெற்ற குழாயினது சீரமைப்பு பணிகளை இன்று நிறைவு செய்ய முடியும் என அதன் தலைவர் டி.ஜி ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: