வித்தியா கொலை சாட்சியப் பதிவுள் நிறைவு!

Wednesday, August 30th, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவுபெற்று சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் கடந்த 3 மாதங்களாக யாழ்.மேல் நீதிமன்றில் நீதாய தீர்ப்பாயத்தில்; (ரயல் அட் பார்) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் , வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலமகேந்திரன் சசிமகேந்திரன் , திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரரேமசங்கர் ஆகிய மூவர் இடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை எதிரிகள் சாட்சியாளர்களாக அழைக்கப்பட்டு சாட்சியம் பெறப்பட்டிருந்தனர். அன்றையதினம் 1,2,3,4,5, மற்றும் 6 ஆம் எதிரிகள் சாட்சியமளித்தனர்.
இனறு ; (29.08)  7, 8, மற்றும் 9 ஆம் எதிரிகள் சாட்சியாளர்களாக அழைக்கப்பட்டு சாட்சிய மளித்திருந்தனர்.
சாட்சியத்தின் போது, நேற்றுமுன்தினம் சாட்சியமளித்த 5 ஆம் எதிரி சட்ட வைத்திய அதிகாரி நீங்கள் எல்லாம் தமிழரா என கேட்டதாகவும், விந்தனுவில் மாட்டுப்படுவீர்கள் என கூறியதாகவும் சாட்சியமளித்திருந்தார்.
அந்த சாட்சியத்தினை உறுதிப்படுத்தும் வகையில், சட்ட வைத்திய அதிகாரி நேற்றையதினம் 5 ஆம் எதிரியின் சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கு இணங்க மன்றில் சாட்சியமளித்தார்.
அத்துடன், நேற்றையதினம் சாட்சியமளித்த 7ஆம் எதிரி 12 ஆம் திகதி காலை முதல் மாலை வரை தான் என்னென்ன செய்திருந்தாக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதாகவும், அந்த வாக்குமூலத்தில் தான் கையடக்கத் தொலைபேசியினை அடகு வைத்தது மட்டும் தான் பதியப்பட்டுள்ளதாகவும் சாட்சியமளித்தார் அந்த சாட்சியத்தினை தெளிவுபடுத்தும் வகையில், மன்றினால், குற்றப்புலனாய்வுப் பிரிவு உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மன்றிற்கு அழைக்கப்பட்டு 7 ஆம் எதிரியின் சட்டத்தரணியினால் குறுக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

குற்றப்புலனாய்வு பிரிவின் உதவிப்பொலிஸ் அத்தியட்சர் 7வது எதிரியிடம் கன்னங்கர என்ற குற்றப்புலனாய்வு அதிகாரி வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும், அவரின் கையொப்பத்தினை தான் அடையாளம் காட்ட முடியுமென்றும் மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து, 9வது எதிரியின் மனைவி சசிக்குமார் மகாலக்சுமி மன்றில் சாட்சியமளித்தார்.
சுhட்சியங்களை நிறைவுசெய்த மன்று அரசம ற்றும் எதிரிகள் சார்பான சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளை குறிப்பிட்டு சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களை வழங்க அனுமதித்துள்ளதுடன், 9 எதிரிகளையும் அன்றையதினம் வரை (12.09) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது

Related posts: