விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரை – இலங்கையில் சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் வைத்தியசாலைகளிலும் வழங்கப்படுகின்றது – அமைச்சர் ரமேஷ் பத்திரன!

Wednesday, September 29th, 2021

விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையின் கீழ் சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம், வைத்தியசாலைகளிலும் வழங்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட அனைவரும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு அமைய சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு பரிந்துரைத்துள்ளனர்.

தடுப்பூசியினால் ஏற்படக்கூடும் பாதிப்பு நிலை தொடர்பாக உலகிலேயே பதிவாகிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நிகழ்வுகளை கருத்திற்கொண்டதன் பின்னர் தடுப்பூசியில் உள்ள பாதுகாப்பான பெறுபேறுகளை அடுத்து தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என்பதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

எனவே, உலகின் பல நாடுகளில் சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையிலும் அந்த வழிகாட்டல்கள் மூலம் அதே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் நிலை குறிப்பிட்ட ஒருசிலருக்கு மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் தடுப்பூசியினால் கிடைக்கின்ற பாதுகாப்பு மற்றும் நன்மைகள் அதை விட அதிகமானவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இதனால் ஏற்படுகின்ற சிறிய பாதிப்புகளை விட இதனால் கிடைக்கின்ற பாதுகாப்பு மிகவும் பெறுமதி வாய்ந்தது என்பதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையின் விசேட வைத்திய நிபுணர்கள் அனைவரும் பரிந்துரைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: