வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுங்கள் – அரச ஊழியரிடம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை!

Tuesday, December 29th, 2020

2021ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுமாறு அரச ஊழியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் பற்றிக் ஆடைகளை ஒரு நாளாவது அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தல், உள்நாட்டில் ஆடைத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆடைகளுக்கான அந்நிய செலாவணியை ஆண்டுதோறும் அதிகரித்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 3 மில்லியன் வரையிலான அரச ஊழியர்கள் அனைவரினதும் ஆதரவினை இதற்காக வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: