வான்பாய்வது குறித்து கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை!

Saturday, December 19th, 2020

விசுவமடுக் குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களையும் பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக குறித்த அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

“விசுவமடு குளம் தற்போது வான் பாய ஆரம்பித்து உள்ளது. இதனுடைய நீரானது பிரமந்தனாறு குளத்தை வந்தடைவதன் மூலம் பிரமந்தனாறு குளத்தின் நீர் அதிகரித்து வான் பாயக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் ஊடாக கிராம அலுவலருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் மூலம் மக்களுக்கு இந்த தகவல் வழங்கப்படும். அத்துடன் அருகிலுள்ள இராணுவத்தினருக்கும் இத்தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Related posts: