மின்சார சபைக்கு 228 மில்லியன் ரூபா நஷ்டம்!
Sunday, June 18th, 2017
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 228 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயரவர்தன இதனை தெரிவித்துள்ளார் மழையுடனான காலநிலையின் போது மாத்தறை மின்சார உபநிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதேபோன்று பல பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, மின் உபநிலையங்கள் மற்றும் மின் மாற்றிகள் என்பன சேதப்பட்டுள்ளதாகவும் சுலக்ஷன ஜயரவர்தன தெரிவித்துள்ளார்
Related posts:
முறையற்ற வகையில் முதல்வருக்கான நிதி ஒதுக்கீடு : நிராகரித்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலான விண்ணப்பப் படிவம் சட்ட மாஅதிபரால் கையளிப்பு!
தரிசு நிலத்தில் அல்லது கைவிடப்பட்ட நிலத்தில் அரச காணிகள் உள்ளடங்களாக 1500 ஏக்கரில் விவசாயம் - களமிற...
|
|
|


