முறையற்ற வகையில் முதல்வருக்கான நிதி ஒதுக்கீடு :  நிராகரித்தது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Thursday, November 29th, 2018

யாழ் மாநகரசபைக்கு முதல்வருக்கான அதிகரித்த நிதி ஒதுக்கீடு முறையற்ற வகையில் உருவாக்கப்படுவதாக தெரிவித்த குறித்த முன்மொழிவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

யாழ் மாநகரின் புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் இன்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது முதல்வருக்கான நிதி ஒதுக்கிடு ஒன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவொன்றை ஆர்னோல்ட் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறித்த தீர்மானமானது சபை விதிமுறைகளுக்கு முரணானது என்றும் சபையின் வரையறைக்குள் அடங்கும் எந்த நிதியானாலும் சபையின் நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் காணப்படும் நிலையில் குறித்த நிதியமானது சட்ட யாப்புகளுக்கு முரணானதாக காணப்படுவதால்  இதை ஏற்க முடியாது.

அந்தவகையில் குறித்த நிதியம் மாநகரசபைக்கு முறையற்ற வகையில் சிபார்சு செய்யப்படுவதாகவும் அதனால் குறித்த தேவையற்றதொன்றெனவும் இது சில தனிப்பட்ட சுயநலன்களுக்கானதாக அமைய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குறித்த முன்மொழிவை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதனிடையே முதல்வரது வெளிநாட்டு போக்குவரத்து  தேவைகளுக்காக ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கிடு செய்வதற்கான பிரேரணை ஒன்றும் சபையின் பாதீட்டில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நேர்மையான அரச அதிகாரி எவரும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் – ப...
தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தெரிவிப்ப...
பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் – துறைசார் தரப்பினரிடம...