வாக்காளர் பட்டியலில் தொடர்பில் மக்களுக்கு பெப்ரலின் முக்கிய அறிவிப்பு!

Sunday, September 1st, 2019


புதிய வாக்காளர்களை உள்ளடக்கிய புதிய வாக்காளர் இடாப்பு முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.

2019 ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிலுள்ள உங்கள் தகவல்கள் சரியாக உள்ளதா என்பது தொடர்பில் சரி பார்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய வாக்காளர் இடாப்பு நாடு முழுவதும் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சரிப்பார்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்ப்ட்டுள்ளது.

எப்படியிருப்பினும் தேர்தல் செயலக அலுவலகத்தில் உள்ள இணையத்தளத்தில் இதுவரையில் வாக்காளர்களின் தரவுகள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உங்களின் பெயர் விபரங்களை பரிசோதித்துப் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.

https://elections.gov.lk/web/en/voters/registration-as-an-elector/my-registration-details/

Related posts: