குற்றச் செயல்கள் அதிகரிப்பு: பொலிஸ்மா அதிபர் கவலை!

Monday, June 4th, 2018

குறைந்த நிலப்பரப்பளவில் அதிக மனித படுகொலைகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செண்டர் போ மெடிடேஷன் எண்ட் ரிசேச் அமைப்பின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு பேசிய அவர், குறைந்த நிலப்பரப்பளவில் மனித படுகொலைகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது.

அதிகமாக போதை பொருள் பாவனை செய்யப்படும் நாடு, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் அதிகம் இடம்பெறும் நாடு, கருக்கலைப்பு செய்யும் நாடுகளின் நாம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.

இது தான் உண்மை,உண்மை கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும் நாம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். நாம் அடுத்தவர்களை விமர்சித்துக்கொண்டு இருக்காமல் இவற்றை தடுக்க ஒன்றுபட வேண்டும். இலங்கை குற்றச்செயல்களில் முன்னோக்கிச் செல்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:

தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்ப மயப்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் - ஆட்பதிவு திணைக்களத்...
நாட்டில் 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளத...
இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளது – சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அ...