வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம் – திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021

வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கவுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிததுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் தனிபட்ட பாவனைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் டொலரின் பெறுமானத்தை சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக வாகன இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாகன இறக்குமதியின் போது நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் வழங்கும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: