கடும் வரட்சி: பயிரழிவு காப்புறுதிக்கு 9,425 விண்ணம்!

Wednesday, February 15th, 2017

வறட்சியால் பாதிக்கப்பட்ட காலபோகச் செய்கைக்கான காப்புறுதிக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 9,425பேர் விண்ணப்பித்துள்ளனர். என கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்டத்ததில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காலபோகச் செய்கை மேற்கொண்டனர். நீர்ப்பாசனச் செய்கை தவிர்ந்த ஏனைய பயிர் நிலங்கள் வறட்சியால் பாதிப்படைந்தன. மாவட்ட ரீதியில் 30ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அழிவைச் சந்தித்துள்ளது, அழிவடைந்த பயிர் நிலங்களுக்கு காப்புறுதியைப் பெறுவதற்கான படிவங்கள் மாவட்டத்தின் சகல கமநலத் திணைக்களங்களுக்கும் வழங்கப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆராயும் நடவடிக்கை இப்போது நடைபெறுகின்றது.

பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவகர், கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள் நேரடியாகச் சென்று பாதிப்புக்களின் தன்மை குறித்து ஆராய்வர். அவர்களின் அறிக்கை பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்படும் எவ்வளவு காப்புறுதி வழங்கலாம் என்ற அறிக்கை ஒன்றை அவர் எமது திணைக்களத்திற்கு அனுப்புவர். அந்த அறிக்கை விவசாய அமைச்சு அதைக் காப்புறுதிச் சபைக்கு அனுப்பி காப்புறுதி இழப்பீடுகளை வழங்கும் என்றார்.

------------------

Related posts: