வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி இம்மாதம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Saturday, April 3rd, 2021யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
வவுனியா வளாகம் தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக உள்ளது. அதனை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் வெளியிடப்படவுள்ளது.
இதற்கான அனைத்துப் பணிகளையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், கல்வி அமைச்சும் இறுதிப்படுத்தியுள்ளன.
உயர்கல்வியில், வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் என்பது தொடர்பில், ஜனாதிபதியின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், பல்கலைக்கழகங்களில் தற்போதுள்ள பீடங்களுக்கு மேலதிகமாக, மேலும் 2 பீடங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனூடாக, அடுத்த ஆண்டில் மேலும் அதிகமான மாணவர்களை உள்ளீர்க்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|