வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்பான கலந்துரையாடல் நாளை!

வறட்சியை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித சந்திர பியதிலக தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் நாளை காலை 8.00 மணியளவில் நடைபெறுமென்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு இடையிலான ஒரு சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நாளை நடைபெறும் கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை அமைச்சரவைக்கு அறிவிக்க அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். வறட்சியை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார்.
இந்த இழப்பீட்டை எப்படி வழங்குவது? எவ்வாறான விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. நாளை நடைபெறும் கலந்துரையாடலில் இது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக திரு.சந்திர பியதிலக மேலும் தெரிவித்தார்
Related posts:
|
|