வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய நிபந்தனை – அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!

Saturday, July 6th, 2019

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நிபந்தனை விதித்துள்ளார்.

புகையிரத ஊழியர்கள் இரண்டு வார காலப் பகுதியில் மீளவும் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடாவிட்டால் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டால் வர்த்தமானி அறிவித்தலை நீக்கிக்கொள்வதாக போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts: