யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ,  இலங்கை ஆசிரியர் சங்கமும், பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து எற்பாடு செய்த சர்வதேச தொழிலாளர்கள் தினம்

Tuesday, May 3rd, 2016

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ,  இலங்கை ஆசிரியர் சங்கமும், பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து எற்பாடு செய்த சர்வதேச தொழிலாளர்கள் தினம் கடந்த  ஞாயிரன்று இடம்பெற்றது.

காலை 10மணியளவில் யாழ் .பல்கலைக் கழக முன்றலில் தொழிலாளர்கள் தின ஊர்வலம் ஆரம்பமானது.  குறித்த ஊர்வலமானது காலை -10 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வாயிலில் ஆரம்பமாகி குமாரசாமி வீதி வழியாகப் பலாலி வீதியை அடைந்து அங்கிருந்து பரமேஸ்வராச் சந்தியை அடைந்து இராமநாதன் வீதியூடாக மீண்டும் பல்கலைக்கழக பிரதான வாயிலூடாக மீண்டும் கைலாசபதி கலையரங்கை  அடைந்து நிறைவுபெற்றது .  அங்கு விசேட மேதினக்  கூட்டமும் இடம்பெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பாதாதைகளைத் தாங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் இலங்கை ஆசிரியர்  சங்கத்தலைவர் ஜோசப் ஸ்ரான்லின், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் , யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள், யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஊழியர்களுக்கான சலுகைகள் இதுவரையும் அரசாங்கத்தினால் எமக்கு வழங்கப்படவில்லை என நிகழ்வில் கலந்துகொண்ட தொழிற்சங்க ஊழியர்கள் கவலை வெளியிட்டனர்.

7312620d-2511-4a81-9904-c684c3bde3c4 2e247bc2-2666-4941-9609-0ecdf081dbea

Related posts: