இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை பொறுப்பேற்பு!

Monday, April 18th, 2022

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்

முன்பதாக 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றையதினம் தவியேற்றுள்ளது.

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகவும்

ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சராகவும்

நாசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சராகவும்

டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சராகவும்

கனக ஹேரத் – நெடுஞ்சாலை அமைச்சராகவும்

நாலக கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சராகவும்

காஞ்சனா விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராகவும்

சன்ன ஜயசுமண – சுகாதாரம் அமைச்சராகவும்

பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா அமைச்சராகவும்

திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில் அமைச்சராகவும்

விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை அமைச்சராகவும்

ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராகவும்

ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அமைச்சராகவும்

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல் அமைச்சராகவும்

விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சராகவும்

தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம் அமைச்சராகவும்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராகவும் பதிவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்ககது.

Related posts: