பணத்தை தூய்மைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் கயந்த கருணாதிலக!

Thursday, October 5th, 2017

பணத்தை தூய்மைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இவ்வாறு குறிப்பிட்டார்.

பணத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதி வழங்கப்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையிலான கட்டளைகளை விரிவுபடுத்துவதற்காக தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்குமாக நீதி அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: