வன்முறையில் ஈடுபட்ட 230 பேர் கைது!

Monday, March 12th, 2018

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், மொத்தமாக 230 பேர் கைதாகியுள்ளனர் என பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தள்ளார்.

இத்துடன் அவர்களில் 161 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். ஏனைய 69 பேரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு மூல காரணமாக செயற்பட்ட 10 பேர் கைதாகி, அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: