வட மாகாணத்தில் மலேரியா தொற்று அதிகரிக்கும் அபாயம் – பிராந்திய மலேரியா தடை இயக்க பொறுப்பு வைத்திய அதிகாரி எச்சரிக்கை!

Saturday, May 5th, 2018

வடக்கு மாகாணத்தில் மலேரியா தொற்று அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய மலேரியா தடை இயக்க பொறுப்பு வைத்திய அதிகாரி நொறிஸ் மரியச்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

இலங்கை நாட்டில் இருந்து மலேரியா பரம்பல் இல்லை என 2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. இருப்பினும் மீண்டும் மலேரியா இந்த நாட்டுக்குள் பரவாமல் இருப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகவுள்ளது. அந்த வகையில் மலேரியா தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மலேரியா ஒட்டுண்ணியால் பரப்பப்படும் நோயாக உள்ளது. மலேரியா நோய் உள்ள ஒருவரை நுளம்பு கடித்து அதே நுளம்பு வேறு ஒருவரைக் கடிக்கும்போது இந்த ஒட்டுண்ணி கடத்தப்படுகிறது. இவ்வாறு தொற்று  ஏற்படுகிறது. இது பொருளாதார பின்னடைவை மட்டுமல்லாது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியிருந்தது.

நீண்டகால விளைவு உடனடி விளைவுகளாக சிறுவர்கள் தாய்மார்கள் பெரியவர்கள் மீது தாக்கம் கூடுதலாக உள்ளது. மலேரியா பெரும் சவாலாக எமது நாட்டில் இருந்து வந்தது. இதை கட்டுப்படுத்துவதற்கு பெரும்தொகையான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கடந்த 5 வருடங்களாக நாட்டுக்குள்ளேயே மலேரியா பரவக்கூடிய தன்மை தடுக்கப்பட்டது.

இருப்பினும் வெளிநாடுகள் இந்திய ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மலேரியாவின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால் அங்கிருந்து இலங்கைக்கு வருபவர்கள் மற்றும் தேவை நிமித்தம் இலங்கையில் இருந்து அந்த நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் மூலம் மீண்டும் அந்த நோய் பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகளவில் தற்போது ஏற்பட்டுள்ளது.

Related posts: