வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் சாள்ஸ் தெரிவிப்பு!

Friday, February 26th, 2021

வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி எம்.எஸ் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்விலேயே இவ்விடயத்தை ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

வட மாகாணத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக, சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாதுறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு வட மாகாண சுற்றுலா பணியகம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

தற்போது வட மாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 150 சுற்றுலா மையங்கள் தொடர்பான ஆவணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் விபரங்களை வெளியிட்டமை மகிழ்ச்சியளிக்கிறது. வட மாகாண சுற்றுலாத் துறையை எதிர்காலத்தில் விரிவுபடுத்த இவை உதவி புரியும் என்று நம்புகின்றேன். அத்துடன் இதற்கான முழு ஒத்துழைப்பும் சுற்றுலா பணியகத்திற்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: