வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா செப்டம்பர் 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Wednesday, September 7th, 2022

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா செப்டம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதனடிப்படையில் ஒக்டோபர் 1ஆம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெண்ணைத் திருவிழாவும்  ஒக்டோபர் 3ஆம் திகதி துகில் திருவிழாவும் ஒக்டோபர் 4ஆம் திகதி பாம்புத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

கம்சன் போர்த்திருவிழா ஒக்டோபர் 5ஆம் திகதியும் வேட்டைத் திருவிழா ஒக்டோபர் 6ஆம் திகதியும் சப்பறத் திருவிழா ஒக்டோபர் 7ஆம் திகதியும் தேர்த்திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதியும் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 9ம் திகதியும் இடம்பெறவுள்ளது.

கேணித் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 9ம் திகதி காலையும் அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று பெருந்திருவிழா நிறைவுபெறும்.

இதனிடையே ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்தை சுகாதார முறைப்படி நடத்த மகோற்சவ கால முன்னாயத்த ஏற்பாட்டுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை சகல கடை உரிமையாளர்களும் ஒவ்வொரு நாளும் வரும் கழிவுகளை வெளியில் வீசாது ஒன்றாகச் சேர்த்து பிரதேச சபை வாகனத்தின் மூலம் அகற்றுதல் வேண்டும், பச்சை குத்துதல், காதுகுத்துதல் போன்ற செயற்பாடுகள் ஆலயச்சுற்றாடலில் அனுமதிக்கப்படமாட்டடாது, போதைவஸ்துப் பொருட்கள், புகைத்தல் மதுபாவனைப் பாவனை, விற்பனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: