வடமராட்சி கிழக்குக்கில் ஆசிரியர் பற்றாக்குறை: பின்னடிக்கின்றனர் என்கிறார் வலயப் பணிப்பாளர்!

Sunday, June 24th, 2018

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்துக்கு சங்கீதம் மற்றும் சித்திரப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை என்று பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சில வருடங்களாக தமது பாடசாலையில் குறித்த பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமனம் செய்து தருமாறு வலயக்கல்விப் பணிப்பாளரிடமும் கல்வி அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பெற்றோர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.  எனவே உரிய ஆசிரியர்களை விரைவில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பாடசாலைக்குச் சித்திரபாட ஆசிரியர் தற்காலிகமாக பகுதிநேர ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். சங்கீத பாட ஆசிரியர் நியமனத்தில் எமது வலயத்துக்குத் தொடர்ந்தும் பற்றாக்குறையே ஏற்பட்டுள்ளது.

எமது வலயத்துக்கு உட்பட்ட நாகர்கோவில் மகாவித்தியாலயம், செம்பியன்பற்று அ.த.க. பாடசாலை, ஆளியவளை சி.சி.த.க பாடசாலை, வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், உடுத்துறை மகாவித்தியாலயம், கட்டைக்காடு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை போன்ற பாடசாலைகளிலும் சங்கீத ஆசிரியர்கள் மற்றும் நடன ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.

எமது பிரதேசத்துக்கு வருவதற்கு ஆசிரியர்கள் விரும்புகிறார்களில்லை. புதிதாக நியமனம் வழங்கப்படுவோரையும் கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறுபவர்களையுமே நியமிக்க வேண்டிய தேவை உள்ளது. விரைவில் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts: