மின்பாவனையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சந்தர்ப்பம்!

Friday, March 10th, 2017

சூரிய சக்தி சமர் என்றதொரு புதிய திட்டம் இலங்கையில் அறிமுகமாகியுள்ளதுடன் இத்திட்டத்தை மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட 3 அமைப்புகளுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2050 ஆம் ஆண்டளவில் இலங்கைக்குத் தேவையான முழு மின்சாரத்தையும் இந்த திட்டத்தினூடாகப் பெற்றுக்கொள்வதே நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் நாட்டில் 10 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வாய்ப்பும், அதனூடாக மின்சாரத்தை மின்சாரசபைக்கு விற்று பணம் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கவிருக்கிறது.

மின்பாவனையாளர்கள் தமது வீட்டுக்கூரைகளில் சூரியசக்தித் தொகுதிகளை பொருத்தி மின் உற்பத்தி செய்து தேவையான மின்சாரத்தை விட மேலதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சாரசபைக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2020 இல் 200MW மின் உற்பத்தி 2025 ஆகும் போது 1000MW கொள்ளவுடைய சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இதன் நோக்கமாகும்.

மேலும், இதனை செயற்படுத்தத் தேவையான மூலதனத்திற்கு சலுகை அடிப்படையில் அரச அல்லது தனியார் வங்கியிடமிருந்து கடன் பெற ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: