வடக்கு புதிய அமைச்சர்களை விசாரிக்கக் குரே நடவடிக்கை!

Thursday, April 12th, 2018

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது.

புதிய அமைச்சர்கள் மூவருக்கு எதிராக மோசடிக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக் கப்பட்டுள்ளன.

பிக்கப் வாகனம் பயன்படுத்தாமல் அதற்குரிய கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டமை, தனிப்பட்ட ஆளணியில் நியமிக்கப்பட்டவர்களுடன் கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருந்து அவர்களின் சம்பளப் பணத்தைப் பெற்றுக் கொண்டமை, தனிப்பட்ட ஆளணியில் பெயர் குறிப்பிட்டு பணியாற்றாதவர்களுக்கு சம்பளம் வழங்கியமை உள்ளிட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண தலைமைச் செயலரைக் கோரும் கடிதத்தை ஆளுநர் இன்று அனுப்பவுள்ளார் என்று நம்பிக்கையாகத் தெரியவருகின்றது.

Related posts:


சிகை அலங்காரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று : மேலும் 25 பேரின் நிலைமை குறித்து ஆராய்வு – காலவரை...
“அம்பாம் புயல்” - வடமராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஈ.பி.டி.பியின் யாழ...
சேதனைப் பசளை உற்பத்தி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்தி...