வடக்கில் டெங்கு தீவிரம் !
Wednesday, October 18th, 2017வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்தபோதிலும் இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு வடமாகாண சுகாதாரப்பிரிவு திட்டமிட்டிருப்பதாக யாழ் மாவட்ட சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு டொக்டர் ஜி. ரஜீவ் தெரிவித்துள்ளார்.
இரண்டுதினங்களுக்குள் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆல் அதிகரித்துள்ளது. டெங்கினால் பாதிக்கப்பட்டு 250 பேர் இம்மாதத்தில் சிகிச்சைபெற்ற நிலையில் இன்று இத்தொகை 292ஆக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் இந்த பரிசோதனைகளை தொடந்தும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
மே மாதம் 7ஆம் திகதி தொழிலாளர் தினம்!
தொற்று குணமாகி இரு வாரங்களின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே பயனுடையது - பிரதி சுகாதார பணிப்...
பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாக கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும் – ...
|
|