வடக்கில் சோதனை நடவடிக்கை தொடரும் – இராணுவத்தளபதி!

வடக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடவடிக்கை மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடரும் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை அடுத்து, பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டதுடன் ஒரு மாத காலத்துக்குள் நாட்டில் ஆயிரம் சோதனை நடவக்கைகளுக்கு மேல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
இக் குண்டுத்தாக்குதலை அடுத்து பயங்கரவாத நடவடிக்கைகள் 95 வீதமானவற்றை செயலிழக்கச் செய்துள்ளதாகவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலப்பகுதிக்குள் படைவீரர்கள் நம்ப முடியாதளவு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு தேசிய தௌஹீத் ஜமா அத் பயங்கரவாதத்தை செயலிழக்கச் செய்துள்ளதாகவும் படையினரின் 24 மணித்தியால கடும் அர்ப்பணிப்புள்ள உழைப்பே அதற்குக் காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|