தொழிலாளர் தினத்தில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பரோல் வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை !

Friday, April 26th, 2024

தேசிய தொழிலாளர் தினம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது.

இவ்வாறு உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள மே தினத்தன்று இலங்கைத்தீவில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மே தினத்தையும் தேர்தல் விளம்பரமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் தொழிலாளர் தினத்தில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பரோல் வழங்குமாறு சர்வதேச கண்டங்களுக்கு இடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதில், துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டாம் என்றும் இந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சிறைகள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன. நமது நாட்டில் தற்போதுள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இந்த கைதிகளில் சிறிய அபராதம் செலுத்த முடியாதவர்களும், சிறு குற்றங்களுக்கு தண்டனை பெற்று பிணை வழங்க ஆள் இல்லாததால் தண்டனை பெற்றவர்களும் உள்ளனர்.

கைதிகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும்போது இவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பே...
வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி...
வடக்கில் குருதிக்கு பெரும் தட்டுப்பாடு - தானம் வழங்குமாறு யாழ் போதனா வைத்தியசாலை கோரிக்கை!