வடக்கின் ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு!

Tuesday, October 25th, 2016

யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை(20) இரவு யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை(25) வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற பூரண ஹர்த்தாலுக்குக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவு தெரிவித்துள்ளதுடன் இன்று இடம்பெறுகின்ற ஹர்த்தாலுக்குக் கல்விச் சமூகம் தனது பூரண ஆதரவை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவிக்கையில்,

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புக்கள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. ஆகவே, இந்தப் போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்புக்களும் ஆதரவு வழங்க வேண்டும். குறிப்பாகக் கல்விச் சமூகம் இந்தப் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

ceylonteachersunion

Related posts: