18 ஆயிரம் சிறார்களின் ஆபாசப் படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன – இன்றுமுதல் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021

கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதிமுதல் இம் மாதம் 27 வரை 18 ஆயிரம் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் அடங்கிய புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் ஆபாசப் படங்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவது குறித்து இன்றுமுதல் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்த இடத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது, எந்த டெஸ்க்டொப்பில் எந்த லப்டொப்பில் சிறுமி ஒருவரின் படமா அல்லது வீடியோவா பதிவேற்றம் செய்யப்படுகின்றது போன்ற விடயங்களை எமக்கு அறியக்கூடியதாகவுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதிமுதல் இம் மாதம் 27ஆம் திகதிவரை 18 ஆயிரம் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன என்றும் இலங்கைக்குள் இருக்கும் பெரும்பாலான கணினிகளிலிருந்தும் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களின் ஐபி முகவரி மற்றும் தொலைபேசி எண்களைக் கண்டுபிடித்துள்ள தாகவும் இவை குறித்து விசாரணை முன்னெடுக்கப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: