ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி:மத்திய வங்கி ஆளுநரிடம் கேள்வி!

Sunday, December 4th, 2016

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாது போனமை குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற பொருளாதார விடய குழுக்கூட்டத்தின் போது இந்தக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இந்தநிலையில் உரிய பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்று பிரதமர் இதன்போது மத்திய வங்கியின் ஆளுநரிடம் கோரியுள்ளார்.

இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சிலர், ரூபாவின் வீழ்ச்சியை 147 ரூபா 50சதத்துக்கு உட்பட்டநிலையில் வைத்திருக்கவேண்டும் என்ற ஜனாதிபதியின் விருப்பத்தை நினைவுப்படுத்தினர்.

colgft170814751_4505978_04072016_kaa_cmy

Related posts: