ரிஷாத் வீட்டில் மண்ணெண்ணெய் – மர்மம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

Wednesday, July 28th, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமிக்கு தீ பற்றக் காரணம் யாராவது மண்ணெண்ணெய் ஊற்றியிருக்கலாம் என புலனாய்வுக் குழுவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

அதன்படி குறித்த வீட்டுக்கு மண்ணெண்ணெய் கொண்டு வந்த நபரை முதலில் அடையாளம் காண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த நபர் அடையாளம் காணப்பட்டால் மண்ணெண் ணெய் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதற்கான காரணத்தை அறிந்தால் விசாரணைக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று புலனாய்வு விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வீட்டில் வேலை செய்யும் சாரதியால் மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டதாக விசாரணையின் போது ரிஷாத் பதியுதீனின் மாமியார் கூறியதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த பணிப்பெண்ணின் அறையில் கண்டெடுக்கப்பட்ட லைட்டரின் உரிமையாளர் யார் என்றும் டயகம சிறுமியின் தலையணைக்கு அருகில் அது எப்படி வந்தது என்பன போன்ற விடயங்களை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை அமைச்சரின் வீட்டில் ஒருபோதும் மண்ணெண்ணெய் – லைட்டரைப் பயன்படுத்தியதில்லை என முன்னதாக குறித்த வீட்டில் பணிபுரிந்த மற்றொரு பெண் விசாரணையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: