இலங்கையில் இதுவரை 21 இலட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Friday, June 11th, 2021

நாட்டில் இதுவரை 21 இலட்சத்து 56 ஆயிரத்து 935 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்றையதினத்தில் மாத்திரம் 67 ஆயிரத்து 615பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 11இலட்சத்து 66 ஆயிரத்து 707 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 25 ஆயிரத்து 451 பேருக்கு போடப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் 342 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 54 ஆயிரத்து 993 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2 ஆயிரத்து 865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: