விமான நிலையங்களை மீள திறப்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை – அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல!

Friday, August 28th, 2020

கொரோனா தொற்று அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்காத காரணத்தால் விமான நிலையங்களை மீளத் திறப்பதற்கான திகதியை அரசாங்கத்தால் நிர்ணயிக்கமுடியவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே நாட்டின் விமானநிலையங்கள் மூடப்பட்டன. உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த நாடுகள் கூட, வைரஸ் மீண்டும் பரவலாம் என்ற அச்சுறுத்தல் நிலையின் காரணமாக தமது விமான நிலையங்களை மீளத்திறப்பதற்குத் தயக்கம் காண்பித்து வருகின்றன.

எனவே தான் நாமும் விமானநிலையங்களைத் திறப்பதற்கான தினத்தை இன்னமும் உறுதியாக நிர்ணயிக்காமல் இருக்கின்றோம்.

எனினும் இயலுமானவரை வெகுவிரைவாக விமான நிலையங்களைத் திறப்பதற்கே நாம் திட்டமிட்டிருக்கின்றோம்” என அவர்  மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: