யாழ்.வண்ணார் பண்ணைப் பகுதியில் அதிகாலை வேளை கொள்ளை!

Monday, January 9th, 2017

யாழ்.வண்ணார் பண்ணைப் பகுதியில் வீடொன்றிலுள்ள அனைவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை திருவெம்பாவைப் பூஜை வழிபாடுகளுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 15 ஆயிரம் பவுண் நகைகள், ஐம்பதாயிரம் ரூபா பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று அதிகாலை வீட்டிலிருந்த அனைவரும் திருவெம்பாவைப் பூஜை வழிபாடுகளுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த வயோதிபப் பெண் வீட்டுக் கதவினைத் திறந்து வைத்து விட்டுப்  பால் கறப்பதற்குச் சென்றுள்ளார். இந்த வேளையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய கொள்ளையர்கள் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணத்தினைத் திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

201612141419081258_Electricity-Board-official-house-broken-jewelry-cash-robbery_SECVPF

Related posts: