சாதாரண அளவிலேயயே மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – மின்சார சபை தலைவர் வலியுறுத்து!

Tuesday, June 7th, 2022

மின்கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டாலும், சாதாரண அளவில் தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனைகள் மின்சக்தி அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான இறுதி தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை. எனினும் கட்டணம் அதிகரிக்கப்படாமையால் இலங்கை மின்சார சபையின் பணியாளர்களுக்கு கடந்த மாதம் வேதனத்தை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது 277 பில்லியன் ரூபா வருவாய் கிடைக்கிறது. எனினும் மின்னுற்பத்திக்கான செலவு 755 பில்லியன் ரூபாவாக உள்ளது.

இதனை ஈடு செய்வதானால் மின் கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். இருந்த போதிலும் அரசாங்கம் மற்றும் திறைசேரி என்பவற்றால் இவ்வாறான அளவு கட்டணத்தை அதிகரிக்க முடியாது.

அவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும் மக்களால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, சாதாரண அளவில் மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: