யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு வருகின்றது வித்தியாவின் வழக்கு!

Wednesday, July 13th, 2016

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வு பிரிவினரால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த வழக்கு மாற்றப்படவுள்ளது என்றும் நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் தொர்பான வழக்கு விசாரணை இன்று (13) மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மன்றில் தோன்றிய குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளின் சில முடிவுற்றுள்ளது.

இவ்வாறு முடிவுற்றுள்ள விசாரணைகளின் அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இவ்விசாரணைகள் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி மன்றில் கோரியிருந்தார்.

இதற்கமைய மேலதிக விசாரணைகள் நடைபெறுவதற்கான அனுமதி மன்றினால் வழங்கப்படுகின்றது என்றும், விரைவில் இவ்வழக்கு விசாரணைகளை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம் ஒப்படைக்கப்படும் என்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்திருந்தார்.

Related posts: