யாழ்.மாவட்ட இளையயோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு – யாழ்.மாவட்டச் செயலர் அறிவிப்பு!

Saturday, February 18th, 2017

யாழ்ப்பாணத்தில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளையோர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

ஆடைத் தொழிற்சலைகள் உள்ளிட்ட தனியார் துறை நிறுவனங்களுக்கான, ஆள்சேர்ப்புக்கள் இம்மாத இறுதி மற்றும் மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.

தொழில் ஆர்வம் உடையவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பயனை அடைய முடியும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண மாவட்டச்செயலக பொதுமக்கள் தொழில்சேவை மைய நிலையத்தால் தொழிலுக்காக் காத்திருக்கும் இளையோருக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆடைத்தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், உள்ளுர் உற்பத்தி வியாபார நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் துறைகளுக்கான ஆள்சேர்ப்புக்கள் இம்மாத இறுதி மற்றும் மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.

ஜீ.சீ.ஈ சாதாரண தரம் மற்றும் உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள், தொழில் ஆர்வம் உடையவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயனை அடையமுடியும். இது தொடர்பான மேலதிக விபரங்களை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மைய நிலையத்தில் நேரடியாகவோ அல்லது 021 221 9359 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ள முடியும்.

Vethanayakan

Related posts: