யாழ். மாநகர சபை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்!

Wednesday, August 3rd, 2016
14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். மாநகரசபை  தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்றுமுதல்(03)  ஆரம்பித்துள்ளனர். இதனால், யாழ். மாநகர சபையின் அன்றாடச் செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது கோரிக்கைகளை செவிமடுப்பதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ நிர்வாகம் தயார் நிலையில் இல்லை. நாங்கள் தொடர்ச்சியாக உதாசீனப்படுத்துவதையும் காணக் கூடியதாகவுள்ளது. எமது பல்வேறு கோரிக்கைகளையும் கடந்த 18 மாதங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் புதிய ஆணையாளர் பதவியேற்றுப் பத்து மாதங்கள் கடந்துள்ளன. எனவே, தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நாம் இன்று ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் நிரந்தரத் தீர்வு காணும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மாநகர சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகர சபையில் வாகன மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட இதர பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள், தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து யாழ்.மாநகர ஆணையாளருடன் பல சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.அந்த சந்திப்புக்களின் பிரகாரம், நிரந்தர நியமனம் மற்றும், தொழிலாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொழிலில் இருந்து வேறு தொழிலுக்கு மாற்றப்பட்டமை குறித்து எந்த பதில்களும் இதுவரை கிடைக்காத நிலையில் தமது தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

03082016

Related posts: