தேசிய பாரம்பரியத்தை தீர்மானித்தல், அடையாளம் காண்பது தொடர்பான இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

Friday, February 5th, 2021

இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும் அடையாளம் காணவும் ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான இடைக்கால அறிக்கை அக்குழுவின் உறுப்பினர்களினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடைக்கால அறிக்கைக்கு அமைய முன்வைக்கப்படும் முன்மொழியப்பட்ட வழிமுறைகள் பொதுமக்களின் கருத்து கோரலுக்காக எதிர்வரும் 8 ஆம் திகதி நாளிதழ்களில்  பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களின் கோரிக்கைக்கு அமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும் அடையாளம் காணவும் ஒரு வழிமுறையை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதலை பெற்றுக்கொண்டார்.

அதற்கமைய தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும், அடையாளம் காணவும் உரிய வழிமுறையை தயாரிப்பதற்கு 16 நிபுணர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: