யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு!

Friday, October 20th, 2017

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் பவுன்ராஜ் சுலக்ஸன் ஆகியோரின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை முதல் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் விரிவுரையாளர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டு உயிரிழந்த இரு மாணவர்களினதும் உருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து, மெழுகுதிரி ஏந்தி உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த இரு மாணவர்களின் ஞாபகார்த்த நினைவுரைகளும் இடம்பெற்றது.

Related posts: