யாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது!

Wednesday, January 9th, 2019

நீதிமன்றினுள் பணத்தை திருடிச் சென்ற நபரை துரத்தி சென்ற பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

யாழ் நீதிமன்றில் பணம் வைப்புப் பகுதியில் பணத்தை செலுத்துவதற்கு கையில் பணத்துடன் நபர் ஒருவர் நின்றுள்ளார். அப்பகுதியில் நின்ற மற்றுமொரு நபர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு நீதிமன்றுக்கு வெளியே ஓடியுள்ளார். அவரை நீதிமன்றில் நின்றிருந்த பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.

குறித்த நபரை பொதுநூலகத்துக்கு அண்மையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts: