யாழ் – கொழும்பு சொகுசு பேருந்துகளில் உரிய கட்டண நடைமுறை இல்லை – பயணிகள் விசனம்!

Monday, August 31st, 2020

யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் அதிசெகுசு பேருந்துகளில் ஒருமித்த உரிய கட்டண அறவீட்டு நடைமுறை இல்லை என பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்று கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் அதிசெகுசு பேருந்துகள் பல தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடனும் அனுமதி இன்றியும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகளில் கட்டண விபரம் காட்சிப்படுத்தல் வேண்டும் இருப்பினும் அதிசொகுசு பேருந்துகளில் அவ்வாறு காட்சிப்படுதப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதனைவிட யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பேருந்துகள் கிளிநொச்சி மாங்குளம் வவுனியா போன்ற இடங்களில் ஏறுகின்ற பயனிகளிடம் தமக்கு விருப்பமான தொகை பணத்தை அறவிடுவதோடு சில பேருந்துகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் தொகையை அறவிடுகின்றதாகவும் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் துறைசார் தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: