யாழ். இந்தியத் தூதரகத்திற்கு புதிய துணைத் தூதுவராக சாய் முரளி இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமனம்!

Friday, February 23rd, 2024

யாழ்ப்பாணத்தில் தற்போதைக்கு கடமையாற்றி வரும் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரின் பதவிக்காலம் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளதையடுத்து புதிய துணைத் தூதராக சாய் முரளி இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில், அவர் டில்லிக்கு மாற்றலாகிச் செல்கிறார்.

இதனால் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கே சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

சாய் முரளி 1991 ஆம் ஆண்டு பிறந்த வயது 33 வயதுடைய சாய் முரளி 2019 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலமொன்றில் இந்திய தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: