யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவால் பலி!

Tuesday, December 14th, 2021

கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார்.  யாழ்ப்பாணம் – அராலி வீதி, வசந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய கண்ணன் பத்மலோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த பெண்ணுக்கு 6 நாட்கள் காய்ச்சல் இருந்தது. தனியார் மருந்தகத்தில் மருந்துகளைப் பெற்ற அவர் நேற்றுமுன்தினம் மூச்சுத் திணறல் காரணமாக யாழ். போதனா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் சடலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அவரின் இறப்பு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

Related posts: